காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகள் /Kavangarai Kannappa Swamy Jeeva Samadhi

HV Krishnaprasad Article:

அனையாதிரு

காவாங்கரை கண்ணப்ப சித்தரின் அற்புதங்களை பற்றி அடியேன் போன ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் கட்டுரை எழுதினேன். அதன் பிறகும் பலமுறை அவரை பற்றி எழுத கூடிய பாக்கியத்தை எனக்கு அவர் கொடுத்தார்.

இதுவரை சென்னையில் அமைந்திருக்கும் 38 மகான்களின் ஜீவசமாதிகள், அதிஷ்டானங்கள் பற்றிய கட்டுரையை அடியேன் எழுதி இருக்கிறேன்.

அடியேன் 25 வதாக.

சிறப்பு ஞானியர் கோவில் என்னும் தலைப்பில் காவாங்கரை கண்ணப்பர் குறித்து எழுதினேன்.

38 என்னும் எண்ணிக்கை 380 ஆனாலும். மற்ற அனைத்தை விட எனக்கு காவாங்கரை கண்ணப்பர் மிக, மிக……….சிறப்பு.

2014 லேயே கண்ணப்பரை தரிசித்து இருக்க வேண்டியது. கண்ணப்பருக்கு மௌன குரு என்னும் ஒரு பெயரும் உண்டு. திருவொற்றியூரில் மௌன குரு சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.

திருவொற்றியூர் மௌன குரு சுவாமிகள் வேறு, காவாங்கரை கண்ணப்ப சித்தர் வேறு என்பதை தெரிந்து கொள்ளவே எனக்கு 1 ஆண்டு ஆனது. கண்ணப்பர் எப்பொழுது அழைக்கிறாரோ அப்பொழுது தானே அவரை தரிசிக்க முடியும்.

சென்ற ஆண்டு 2016 ஆகஸ்ட் 18 காவாங்கரை செல்வதற்கு பதில் தவறுதலாக காரனோடை வரை பஸ்ஸில் சென்று விட்டேன்.

புழலுக்கு அடுத்த ஸ்டாப்பிங் தான் காவாங்கரை என்பதும் எனக்கு தெரியாது.

அதற்கு முன் நான் வடசென்னை பகுதியில் அவ்வளவு தொலைவு வந்ததே இல்லை.

காரனோடையில் விசாரித்தேன். இந்த கண்ணப்ப சித்தர் ஜீவசமாதி எப்படி போகணும். அவரை சட்டி சித்தர், மௌன குரு அப்டின்னுலாம் கூட சொல்வாங்க.

காரனோடையில் உள்ள ஒரு பெரியவர் சொன்னார். கண்ணப்பர் இருப்பது காவாங்கரையில். நீங்க இப்போ இருப்பது காரனோடை. ஒன்னும் பிரச்சனை இல்லை. இங்கயும் ஒரு மகானோட சமாதி இருக்கு. அவரை தரிசனம் பண்ணிட்டு அப்புறமா நீங்க பஸ் பிடிச்சி காவாங்கரை போங்க என்றார் அவர்.

சரி என்று நானும் காரனோடையில் அவர் சொன்ன மகானின் சமாதியை தரிசனம் செய்தேன்.

அடியேன் ஒரு மகானின் கோவிலை தரிசனம் செய்தால் அங்கே ஓரளவாது அதிர்வலை, மன சாந்தியை உணர வேண்டும். அந்த உணர்வு எனக்கு வந்தால் மட்டுமே அந்த மகான் கோவிலை பற்றி அடியேன் மற்றவர்களுக்கு சொல்வேன். காரனோடையில் அடியேன் தரிசித்த அந்த மகான் சமாதியில் ஏனோ தெரியவில்லை. எனக்கு அதிர்வலை கிடைக்கவில்லை, மனசாந்தியும் கிடைக்கவில்லை. காரனோடையில் அந்த சமாதியை பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது எனக்கு உயிர் போவதை போல் ஒரு தலைவலி. என் கழுத்தை யாரோ நெறிப்பதை போன்ற ஒரு உணர்வு.

நம்ப தப்பான ஒரு இடத்திற்கு வந்து விட்டோமா? இங்க ஏதேனும் ஈவில் பவர் இருக்கோ என்றெல்லாம் எண்ணம். பேசாமல் நாம் பஸ்ஸை பிடித்து நேரா நம்ப வீட்டுக்கு பெயிடுவோம். கண்ணப்பரை இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று கூட தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்து விட்டோம். அவரை பார்த்து விடுவோம் என்னும் வைராக்கியத்தோடு காரனோடையில் இருந்து காவாங்கரை வந்து கண்ணப்ப சித்தரை தரிசித்தேன்.

அப்பொழுது அவர் கோவிலில் என்னை தவிர வேறு யாரும் இல்லை. அந்த மண்ணில் காலை வைத்தவுடன் திடீர் என்று எதோ புது சக்தி என் உடலில் பாய்வதை போன்ற ஒரு உணர்வு. காரனோடையில் திடீர் என்று எனக்கு ஏற்பட்ட தலைவலி எங்கே? போனது என்று தெரியவில்லை.

அது போன்ற ஒரு பேரானந்தத்தை அதுவரை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. காவாங்கரை கண்ணப்பரின் பக்தனாக அடியேன் ஆகி 1 ஆண்டு கூட ஆகவில்லை.

கண்ணப்பருக்கும் எனக்கு ஏற்பட்ட இந்த 9 மாத இணைப்பில் என் வாழ்வில் எவ்வளவு திருப்பங்கள், எவ்வளவு மாற்றங்கள், எவ்வளவு ஏற்றங்கள்.

பட்டினத்தார் தனது உருவத்தை சிவலிங்க சொரூபமாக மாற்றி கொண்டார், அதே போல் திருவண்ணாமலையில் குகை நமச்சிவாயரின் பிரதான சீடரான விருபாட்சி தேவர்.

அந்த வரிசையில் 1961 இல் தனது திரு உருவையே சிவலிங்கமாக மாற்றி கொண்டவர். அகத்திய முனிவரின் அவதாரமான காவாங்கரை கண்ணப்பர்.

இன்று தமிழ்நாட்டில் பலபேர் நான் தான் அகத்தியரின் அவதாரம் னு சொல்லிண்டு திரிகிறார்கள்.

சித்தர் அடியார்களே உஷார்.

காவாங்கரை கண்ணப்பர் அகஸ்தியரின் சீடர் என்பது கண்ணப்பர் கோவிலை கட்டிய ராமமூர்த்தி ஐயா போன்றோர்களின் கூற்று. என்னை பொறுத்தவரை அவர் அகஸ்தியரின் சீடர் அல்ல.

அகஸ்தியர் தான் கண்ணப்பர். கண்ணப்பர் தான் அகஸ்தியர். அதற்கு பல விஷயங்களை என்னால் உதாரணமாக கூற முடியும்.

ஒன்றுமில்லை இந்த ஆண்டு ஜனவரி 1 அடியேன் செய்த யாத்திரையில் 50 பேர் வந்தார்கள். என் அம்மா, தம்பி, ரிஷப்சனிஸ்ட் சங்கீதா மூவரையும் சேர்த்தால் 53.

காவாங்கரையில் அவ்வளவு மோசமான ரோட்டில் என் அம்மா குப்புற விழுந்து பல்லில் அடிபட்டு, ஒரு ஆட்டோ என் அம்மா மண்டையில் இடித்து அவ்வளவு ஆனபின்பும் என் தாயின் உடலில் ஒரு சிறு கீறல் கூட விழாது கண்ணப்பர் என் தாயை காப்பாற்றி இருக்கிறார்.

52 பேர் இதற்கு ஐ விட்னஸ்.

என் தாயை கண்ணப்பர் காப்பாற்றிய பொழுது அவரின் தரிசனமும் என் தாய்க்கு கிடைத்தது. ஆனால் அடியேனுக்கு இந்த நொடிவரை அவரின் தரிசனம் கிடைக்கவில்லை. அதே சமயம் அவரின் கரிசனம் எனக்கு நிறையவே………… கிடைத்தது, கிடைத்து கொண்டிருக்கிறது.

புனிதமான சித்ரா பௌர்ணமி திருநாளில் என் சித்தம் முழுவதையும் கண்ணப்பரின் மீது வைத்தேன்.

இனி நித்தம், நித்தம் என் வாழ்நாளில் ஆனந்தமே.

ஊரெல்லாம் அணையும்.
நீ அணையாதிரு.

என்பது காவாங்கரை கண்ணப்பரின் முக்கிய உபதேசம்.

இதன் பொருள்.

திரும்ப, திரும்ப இந்த ஊரில் உள்ளோர் பிறந்து, பிறந்து இறப்பதை போல் நீ இறக்காதே. அணைந்து போகாதே. உன்னுள் இருக்கும் அணையாத ஆன்மீக ஒளியை நோக்கு. அதை நோக்கி உன் தேடல் இருந்தால் நீ அணைந்து போகும் நெருப்பாக இருக்க மாட்டாய். அணையா சூரியன் ஆவாய் என்பதே இதன் அர்த்தம்.

Kavangarao Kannappa Swamy Jeeva Samadhi Address

Leave a comment